IRCTC இந்திய ரயில்வேயின் கீழ் ஆன்லைனில் டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் ஆன்லைனில் இ-டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் சில தகவல்களைக் கொடுத்தால் மட்டுமே ரயில் டிக்கெட்டுகளை பதிவு செய்ய முடியும் என்று புதிய விதிகளை ICRTC அறிவித்துள்ளது. அதன்படி நீண்ட காலமாக டிக்கெட் முன்பதிவு செய்யாத பயணிகள் ஐஆர்சிடிசி போரட்டலில் டிக்கெட் முன்பதிவு செய்ய மொபைல் எண், மின்னஞ்சலை சரிபார்க்க வேண்டும்.
அதன் பிறகுதான் அவர்கள் டிக்கெட்டை பெற முடியும் என்று அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக நீண்ட காலமாக ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்யாத பயணிகளுக்கு இந்த விதி பொருந்தும். வழக்கமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த விதி பொருந்தாது.