Categories
மாநில செய்திகள்

இ. கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவிற்கு வீடு ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவிற்கு சென்னை நந்தனம் பகுதியில் வீடு ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அரசியலில் அனைத்துக்கட்டத் தரப்பு மக்களாலும் விரும்பப்படுபவர். இவர் கடந்த 2004 ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை சென்னை தியாகராயா நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் அந்த இடத்தில் புதிய கட்டுமானத்திட்டம் வர இருந்ததால் அங்கு வசித்து வந்த அனைவரையும் அரசு வெளியேறுமாறு அரசு உத்தரவிட்டது.

இதனால் நல்லக்கண்ணுவும் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை கே.கே நகரில் உள்ள வீட்டில் மாத வாடகைக்கு குடிபெயர்ந்தார். எனினும் தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தது.

அரசியல் கட்சி தலைவர்கள் பலர் நல்லக்கண்ணுவும் வெளியேறுமாறு கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பொது ஒதுக்கீட்டில் குடியிருப்போருக்கு வேறு வீடு வழங்கப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது சென்னை நந்தனம் பகுதியில் நல்லகண்ணுவிற்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |