Categories
மாநில செய்திகள்

இஸ்லாமிய பெண்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

18 வயது நிரம்பாத நிலையிலும் பருவமடைந்த இஸ்லாமிய பெண்கள் தாங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ளலாம் என்று பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றம் ஒரு பரபரப்பான தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பானது முந்தைய தீர்ப்புகள் பலவற்றையும் மற்றும் இஸ்லாமிய திருமணத்திற்கான இலக்கணங்களையும் ஆராய்ந்து அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் முழு விவரம் என்னவென்றால், 36 வயதான இஸ்லாமிய நபர் 17 வயதுடைய சிறுமியை கடந்த ஜனவரி மாதம் 21_ஆம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டார். இந்த காதலுக்கு பெற்றோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் இஸ்லாமிய விதிகளின்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இஸ்லாமிய மதத்தின் படி பருவமடைதல் ஒரு பெண் பெரியவர் ஆகி விட்டதற்கான சான்று.

இந்தநிலையில் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் பருவமடைந்த இருவர் ஒருவரை ஒருவர் விரும்பும் பட்சத்தில், பெற்றோரின் விருப்பமும், அனுமதியும் இல்லாமல் திருமணம் செய்து கொள்ள உரிமை உள்ளது என தம்பதியினர் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, முஸ்லிம் சிறுமி முஸ்லிம் திருமண சட்டங்களுக்கு உட்பட்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். பெற்றோர் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் திருமணம் அவர்களின் அடிப்படை தனிநபர் உரிமை எனக் கூறி அந்த திருமணம் செல்லும் என தீர்ப்பளித்துள்ளார். தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |