Categories
உலக செய்திகள்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் பிரச்சனை….. 3 பேர் சுட்டுக்கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

3 பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே மேற்கு கரை பகுதி மற்றும் ஜெருசலேம் நகர் தொடர்பாக பல வருடங்களாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த இரு நகரங்களும் யாருக்கு சொந்தம் என்பதில் 2 நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இஸ்ரேல் நாட்டின் ராணுவத்தினருக்கும் பாலஸ்தீன நாட்டிலுள்ள கசா நகரைச் சேர்ந்த போராளிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த தாக்குதலின் போது இஸ்ரேல் ராணுவத்தினரால் பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்த 44 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்

கடந்த 3 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் சண்டையை நிறுத்திக் கொள்வதாக இரு தரப்பும் அறிவித்தது. இதனையடுத்து நேற்று நாப்லஸ் நகரில் பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக கூறி இஸ்ரேல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது நடைபெற்ற துப்பாக்கி சூட்டின் போது 3 பேர் கொல்லப்பட்டதோடு, 40-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |