காய்கறி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாஞ்சிக்கோட்டை பகுதியில் உழவர் சந்தை ஒன்று அமைந்துள்ளது. இந்த சந்தைக்கு திருவையாறு, கண்டியூர், நடுக்காவேரி, கண்டிதம்பட்டு, மருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் இருந்து 16 டன் காய்கறிகள் கொண்டு வருவது வழக்கம். இந்நிலையில் தற்போது குறைவாக 15 டன் காய்கறிகள் மட்டும் சந்தைக்கு வந்துள்ளது.
இதனால் கத்தரிக்காய் கிலோ 24 -ரூபாய்க்கும், வெண்டைக்காய் 38- ரூபாய்க்கு, அவரைக்காய் 45 -ரூபாய்க்கும், தக்காளி 20-ரூபாய்க்கும், கேரட் கிலோ 56- ரூபாய்க்கும், பீட்ரூட் கிலோ 30-ரூபாய்க்கும், சவுச்சவ் மற்றும் முட்டைக்கோஸ் கிலோ 18-ரூபாய்க்கும், கருணைக்கிழங்கு கிலோ 30-ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதித்துள்ளனர்.