வல்லாரை கீரையில் உள்ள மருத்துவ குணங்கள்:
வல்லாரை கீரை, ரத்தத்தை சுத்திகரிப்பது மட்டும்மல்லாமல், ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும்.
சிறிய குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் படிப்பில் மதிப்பெண்கள் அதிகம் வாங்க வாய்ப்பிருக்கிறது. வல்லாரை கீரையை உண்டு வந்தால் மனப்பாட சக்தி அதிகமாகும்.
வல்லாரை கீரையால், யானைக்கால் நோய், கண் நோய், இதயம் சம்மந்தப்பட்ட நோய், காது, மூக்கு, தொண்டை நோய்கள் குஷ்டம் போன்ற நோய்களை குணப்படுத்துகிறது.
பாடகர்களுக்கு தேவையான கை கண்டதாகும் குரல், கம்மல் திருந்தி இசையின் வெளிப்பாடுகள் தெள்ளத்தெளிவாக உருவாக்கும் தன்மை வல்லாரை கீரைக்கு இருக்கிறது.
வல்லாரை கீரையால், நீர்க்கடுப்பு, சூதக சம்பந்தப்பட்ட கோளாறுகள், நெறிகட்டுதல், வெட்டை சூடு, விரல் வீக்கம், விரல் வாதம், காச நோய், மேக நோய், பல் நோய், தேமல் போன்ற நோய்களும் தீரும். மலச்சிக்கலை தீர்க்கும். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்கும்.