Categories
சினிமா தமிழ் சினிமா

இவ்வளவு பெரிய வெற்றியை நான் எதிர்பார்க்கல!…. “லவ் டுடே” பட ஹீரோ ஓபன் டாக்…..!!!!!

டைரக்டர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் “லவ் டுடே” படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இப்போது ஓடிடி தளத்திலும் வெளியாகி வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த படத்தில் பணிபுரிந்தவர்கள் மற்றும் மீடியாக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதீப் ரங்கநாதன் பேசியிருப்பதாவது “இப்படத்தின் வெற்றி எதிர்பார்த்த ஒன்று தான்.

எனினும் இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை. பர்ஸ்ட்லுக் வெளியானதிலிருந்தே எங்களுக்கு நிறைய ஆதரவு கிடைத்தது. எதிர் காலத்திலும் மக்கள் ஆதரிக்கக்கூடிய திரைப்படங்களை உருவாக்க முயற்சிப்பேன். இத்திரைப்படத்தின் முதுகெலும்பாக இருந்ததற்கு ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன்” என்று அவர் பேசினார்..

Categories

Tech |