பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு பகுதியில் அமைந்துள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் அமைந்துள்ள கடைகளில் அதிரடியாக சோதனை செய்தனர். அந்த சோதனையில் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
இதனையடுத்து அதிகாரிகள் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். அதன் பின்னர் ஒரு கடையின் உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். மேலும் இதுபோன்று கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.