திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிக்கைகள் அறிவிக்கப்பட்டன. அந்த அறிக்கைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சில அறிக்கைகள் மட்டும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. இந்நிலையில் அந்த திட்டங்களும் நிறைவேற்றினால் நன்றாக இருக்குமே என்று மக்கள் சமூக வலைதளங்கள் மூலம் தங்களுடைய விருப்பங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதில் மிக முக்கியமானது கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி மக்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்கடன்களையும், 5 பவுன் வரை அடமானம் வைத்து பெற்ற நகை கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் கடன்களை தள்ளுபடி செய்ய பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவதால் பலரால் கடன் தள்ளுபடி சலுகை பெற முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.