மயிலாடுதுறையில் இரண்டு நாட்களாக பெய்த மழையால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நனைந்து நாசமாகி வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 103 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. மேலும் ரூ. 1 லட்சத்து 85 ஆயிரம் டன் நெல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. அதில் 60 ஆயிரம் டன் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் 25 ஆயிரம் டன் நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கம் அடைந்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் நெல் மூட்டைகள் வெயிலில் மாதக்கணக்கில் கிடைப்பதால் அடி மூட்டையில் சேதமடைந்து விடும்.
மயிலாடுதுறை அருகே மல்லியம், வில்லியநல்லூர், முளப்பாக்கம், பெருஞ்சேரி, மங்கைநல்லூர் ஆகிய பகுதிகளில் திறந்தவெளியில் பல ஆயிரம் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவை இரண்டு நாட்களாக பெய்த கன மழையில் நனைந்து சேதம் அடைந்து வருகிறது என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.