பணத்தை வைத்து சூதாட்டம் விளையாடிய 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஜெயமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள கண்மாய்க்கு அருகில் இருந்து 8 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் பணம் வைத்து சூதாட்டம் விளையாடிக்கொண்டு இருந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சூதாட்டம் விளையாடிய முரளி, ஜெயபாண்டி, பன்னீர்செல்வம், கரிகாலன், முத்தையா, செல்வராஜ், அஜித் குமார் உள்ளிட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த17,900 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.