Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“இவளை கல்யாணம் பண்ண போறேன்” புகைப்படத்தை வைத்து தொந்தரவு…. போக்சோவில் வாலிபர் கைது….!!

சிறுமியை காதலிப்பதாக கூறி தொந்தரவு அளித்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்திலுள்ள எடமலைபட்டிபுதூர் கிராமத்தில் அந்தோணி ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார் ஓட்டுனரான பிரவீன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பிரவீன் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை காதலித்துள்ளார். அந்த சிறுமியிடம் பிரவீன் செல்போனில் தொடர்ந்து பேசியுள்ளார். இந்நிலையில் சிறுமியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் காண்பித்து “இவளை தான் திருமணம் செய்து கொள்ள போகிறேன்” என பிரவீன் கூறியுள்ளார்.

இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரவீனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |