கர்நாடக சங்கீதத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வயலின் கலைஞர் கன்னியாகுமரியை “மிக சிறந்த இசை தூதர்” என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளி எம்.பி புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியாவிலுள்ள ஆந்திர மாநிலத்தில் பிறந்த வயலின் கலைஞர் ஏ.கன்னியாகுமரி தனது 8 வயதிலேயே தன்னுடைய இசை பயணத்தை தொடங்கியுள்ளார். இதனையடுத்து இவர் கர்நாடக சங்கீதத்தை கட்டணம் எதுவுமின்றி அடுத்த தலைமுறைக்கு எடுத்து சென்றுள்ளார். மேலும் இவர் சிறந்த இசையமைப்பாளராகவும், இசை ஆசிரியராகவும் திகழ்கிறார்.
இவருக்கு இந்திய அரசாங்கம் கடந்த 2015 ஆம் ஆண்டு இசைத்துறையில் இவர் ஆற்றிய பங்கை கௌரவிக்கும் விதமாக பத்மஸ்ரீ விருதை வழங்கியுள்ளது. இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளி எம்.பியான ராஜா கிருஷ்ணமூர்த்தி வயலின் கலைஞர் ஏ.கன்னியாகுமரியை உலகின் மிகச் சிறந்த இசை தூதர் என்று கூறி கௌரவித்துள்ளார்.