Categories
சினிமா

இவர் படங்களில் நடிக்க பயன்படும் முன்னணி நடிகர்கள்….!! காரணம் இது தானாம்…!!

தமிழ் திரையுலக இயக்குனர்கள் பட்டியலில் தனக்கென்று தனி இடம் பிடித்தவர் இயக்குனர் பாலா. இவரின் ஒவ்வொரு படங்களும் தனித்துவமாக இருக்கும். இந்த தனித்துவமே இயக்குனர் பாலாவை மற்றவர்களுக்கு மத்தியில் முன்னிறுத்தி காட்டும். ஆனால் பாலாவின் படம் என்றால் ஒரு சில குறிப்பிட்ட நடிகர்கள் நடிக்க பயப்படுவது இயல்பு. ஏனெனில் இவர் தன்னுடைய படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளை படாதபாடு படுத்தி எடுத்துவிடுவாராம். பொதுவாக நடிகர்களின் லுக்கை மாற்றி அமைத்து ரசிகர்களுக்கு மத்தியில் அடையாளமே தெரியாத அளவுக்கு மாற்றி விடுவாராம் இயக்குனர் பாலா.

அதுமட்டுமல்லாமல் பாலா ஒரு படத்தை எடுத்து முடிக்க அதிக கால அவகாசம் எடுத்துக் கொள்வாராம். அவருடைய படங்களில் நடிக்க கமிட் ஆனவர்கள் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு வேறு எந்த படத்திலும் நடிக்க முடியாது. அந்த அளவுக்கு இயக்குனர் பாலா படத்தை இழுத்தடிப்பார் எனவும் கூறப்படுகிறது. இதற்கு பயந்துதான் சில குறிப்பிட்ட முன்னணி நடிகர்கள் பாலாவின் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வது இல்லையாம். இயக்குனர் பாலா தற்போது சூர்யா நடிப்பில் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தை இயக்கி வருவதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

Categories

Tech |