பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார், ஏராளமான படங்களில் நடித்து சாதனை படைத்து வருகிறார். இந்நிலையில் அவர் நேர்மையாக வரி செலுத்துபவர் என்று மத்திய அரசு நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது. மத்திய நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மறைமுக வரிகள்,சுங்க வரிகள் என அனைத்து வரியையும் நேர்மையாக செலுத்தும் பிரபலங்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் நேர்மையாக வரி செலுத்தும் மஞ்சு வாரியாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டுக்கான வரியை முறையாக கட்டியதால் இந்த சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை எடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன