Categories
சினிமா

இவர் கூட நடிக்கிறதா இருந்தா…. “எனக்கு ஒரு ரூபாய் கூட சம்பளமே வேண்டாம்”…. ஷாக் கொடுத்த பிரபல நடிகை….!!!

நடிகர் தனுஷ் உடன் சேர்ந்து நடிப்பதாக இருந்தால் ஒரு ரூபாய் கூட சம்பளம் வேண்டாம் என நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் கூறியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். சமீபகாலமாக இவரது படங்கள் அனைத்தும் வெற்றி பெற்று வந்த நிலையில், தனுஷ் ஹாலிவுட் படங்களிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். இவர் தமிழில் மாறன், திருசிற்றம்பலம், வாத்தி போன்ற படங்களிலும் மேலும் ஹாலிவுட்டிலும் தி கிரே மேன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் பெரும்பாலான நடிகைகள் தனுசுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு போட்டி போடுகிறார்கள்.

அந்த வகையில் ஒரு ரூபாய் கூட சம்பளமே வேண்டாம் தனுஷ் கூட நடிப்பதில், என ஒரு நடிகை கூறி வந்துள்ளார். அதிலும் குறிப்பாக நடிப்பு, நடனம் என அனைத்துமே தனுஷ் உடன் நடித்தால் கற்றுக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் மேயாதமான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இந்துஜா ரவிச்சந்திரன்.

இவர் இதனை தொடர்ந்து பில்லாபாண்டி, மெர்குரி, மகாமுனி, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் நடிகை இந்துஜா திரவம் என்ற இணையத் தொடரிலும் நடித்து வந்துள்ளார். அந்தவகையில் நடிகை இந்துஜா” நானே வருவேன்” என்ற படத்தில் தனுஷுக்கு ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ள நிலையில் தனுஷுடன் சேர்ந்து நடிப்பதற்கு ஒரு ரூபாய் கூட எனக்கு சம்பளம் வேண்டாம் என கூறியுள்ளார். இதனால் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

Categories

Tech |