Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இவர் இருந்தா…..1 போட்டி இல்ல…. ஒரு தொடரையே ஜெயிக்கலாம்….. யாரை புகழ்கிறார் ரிக்கி பாண்டிங்..!!

டிம் டேவிட் ஒரு தொடரையே வென்று கொடுக்கக்கூடிய அளவுக்கு அபாயகரமான வீரர் என்று முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி கெடு விதித்திருந்த சூழலில் தற்போது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் வீரர்களின் பட்டியலை அறிவித்து விட்டனர். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியில் கடந்த ஆண்டு டி20 உலக கோப்பை வென்ற போது அணியில் இருந்த மிட்செல் ஸ்வெப்சன் நீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக சிங்கப்பூரை பூர்வீகமாக கொண்டு தற்போது ஆஸ்திரேலியாவில் குடியேறிந்து வரும் டிம் டேவிட்டுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது..

2019 முதல் 2020 ஆம் ஆண்டு வரை சிங்கப்பூர் அணிக்காக அவர் இதுவரை 14 டி20 கிரிக்கெட்டில் விளையாடி 46 ரன்கள் சராசரியுடன் 158 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 558 ரன்கள் குவித்து அசத்தியிருக்கிறார்.. அது மட்டும் இல்லாமல் ஐபிஎல் தொடரிலும் இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 210 ஸ்ட்ரைக் ரைட்டுடன் 187 ரன்கள் அடித்துள்ளார் டிம் டேவிட்..
உலகெங்கிலும் நடைபெறும் டி20 கிரிக்கெட் போட்டியில் முதன்மை அதிரடி வீரராக பங்கேற்று சிறப்பாக விளையாடி வரும் நிலையில், தற்போது ஆஸ்திரேலிய நாட்டின் குடியுரிமை பெற்றதன் காரணமாக டி20 உலக கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளார்.. உலகில் எந்த மைதானமாக இருந்தாலும் சரி பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை விளாசக்கூடிய திறன் உள்ள இவர் ஆஸ்திரேலியா அணிக்கு பெரும் பலத்தை அளிப்பார் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியில் டிம் டேவிட்  சேர்க்கப்பட்டது குறித்து முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவர் பிக் பாஷ் லீக் கிரிக்கெட் கூட பங்கேற்பதில் சிரமப்பட்டு வந்தார். ஆனால் தற்போது அவர் டி20 கிரிக்கெட்டில் ஆபத்தான வீரராக இருக்கிறார்.. ஐபிஎல் தொடரின் போது நான் அருகில் இருந்து அவரை நன்றாக கவனித்திருக்கிறேன்.. அவர் ஒன்று  இரண்டு போட்டிகளில் மட்டும் அணிக்கு வெற்றி பெற்று கொடுக்க கூடியவர் அல்ல.. அவரால் நிச்சயமாக ஒரு தொடரையை கைப்பற்றி கொடுக்கும் ஆற்றல் இருக்கிறது.

அவரது பேட்டிங் திறன் நாளுக்கு நாள் அது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவரை நான் கடந்த 2003 ஆம் ஆண்டு எங்களது அணில் விளையாடிய ஆண்ட்ரூ சைமண்ட்சுடன் ஒப்பிட விரும்புகிறேன். ஏனென்றால் ஒரு தொடரையை கைப்பற்றி கொடுத்த மாபெரும் வீரர் சைமன்ட்ஸ் எனவே அவரைப் போலவே டிம் டேவிட்டும் ஒன்று இரண்டு போட்டியில் மட்டும் அணிக்கு வெற்றி தேடி கொடுப்பவர் ஆக இல்லாமல் ஒரு தொடரையே வென்று கொடுக்கக்கூடிய அளவுக்கு அபாயகரமான வீரர். எனவே நிச்சயம் அவர் ஆஸ்திரேலியா அணிக்கு வலு சேர்ப்பார் என்று புகழ்ந்து பேசினார்.

Categories

Tech |