நடிகர் சிம்பு பிபி அல்டிமேட் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக களம் இறங்கியுள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த திரைப்படம் வசூல் ரீதியாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றியடைந்தது. இதனைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் ஆகிய படங்களில் சிம்பு தற்போது நடித்து வருகிறார். இதற்கிடையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து நடிகர் கமல் தொகுத்து வழங்கியுள்ளார். திடீரென்று அவர் விலகியதால் அவருக்கு பதிலாக நடிகர் சிம்பு பிபி அல்டிமேட் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஆகியுள்ளார்.
இந்நிலையில் நேற்று சிம்பு பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கியுள்ளார். இவருக்கு ரசிகர்களும் போட்டியாளர்களும் மாபெரும் வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் அவரிடம் பல கேள்விகள் கேட்டனர். இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளரான பாலா சிம்புவிடம் உங்களுக்கு கல்யாணம் எப்போ என்று கேட்டார். அதற்கு சிம்பு நான் சந்தோஷமா இருக்கிறது உனக்கு புடிக்கலையா என்று கேட்டார். இவர் அளித்த இந்த பதில் ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்கள் சிரிப்பில் ஆழ்த்தியது. இவர் இப்படி சொல்வதை பார்த்தால் இப்போதைக்கு சிம்பு கல்யாணம் பண்ண போவதா இல்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.