ரயிலில் வேற்று கிரகவாசிகள் போல் உடை அணிந்த 6 பேர் பெண்களை தாக்கி திருடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவில் பிரபலமான ரயிலாக டைம்ஸ் சதுக்கம் சுரங்க ரயில் உள்ளது. இந்த ரயிலில் இன்று அதிகாலை பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பயணம் செய்துள்ளனர். அப்போது திடீரென பச்சை வேற்றுகிரக வாசிகளைப் போல உடலை இறுக்கிய ஜிம்ப்சூட் ஆடையில் வந்த 6 பெண்கள் ரயிலில் இருந்த 2 பெண்களை தாக்கி கொள்ளையடித்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனையடுத்து படுகாயம் அடைந்த அந்த 2 பெண்களையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை ரயிலில் இருந்த மற்ற பயணிகள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.