சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த 6 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு படிப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. தற்போது பெண்கள் படித்து அனைத்து துறைகளிலும் பணி புரிந்து வருகின்றனர். ஆனால் ஒரு சில இடங்களில் பெற்றோர்கள் தங்களது பெண் பெண் குழந்தைகளின் படிப்பை நிறுத்திவிட்டு குழந்தை திருமணம் செய்து வைக்கின்றனர். இதனால் அந்த பெண்களின் வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரியூர் பகுதியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரது பெற்றோர் ஏர்கோள்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதுகுறித்து அந்த சிறுமி எரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் பெற்றோர், திருமணம் செய்த வாலிபர், பாட்டி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.