Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இவர்கள் என்னை ஏமாற்றி விட்டார்கள்…. இங்கிலாந்து பெண்ணின் புகார்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் புகார்  அளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த  பார்பரா எலிசபெத் வில்லிஸ் என்ற பெண் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் எனக்கு இந்தியா மற்றும் இங்கிலாந்து என இரட்டை குடியுரிமை உள்ளது. எனது முன்னோர்களின் பூர்வீக சொத்து கடலூர் மாவட்டத்தில் உள்ளது. இந்நிலையில் நான் கடந்த 2014- ஆம் ஆண்டு கடலூரில் 2 ஏக்கர் நிலம் வாங்கி அங்கு வசித்து வந்தேன். இந்நிலையில் எனக்கு சென்னையை சேர்ந்த 2  பேருடன் அறிமுகம் ஏற்பட்டது.

அதில் ஒருவர் எண்ண திருமணம் செய்து கொள்வதாக கட்டாயப்படுத்தி கடலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வது போல் ஏமாற்றினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் சொந்த வேலை காரணமாக இங்கிலாந்து நாட்டிற்கு சென்று விட்டேன். இந்நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது அவர்கள்  2  பேரும் சேர்ந்து எனக்கு சொந்தமான பணம் மற்றும் சொத்துக்களை அபகரித்து கொண்டனர். இதுக்குறித்து மசினகுடி காவல் நிலையத்தில் நான்  பலமுறை புகார் அளித்து விட்டேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது சொத்துக்களை பறித்த 2 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளார்.

Categories

Tech |