மகளிர் சுய உதவி குழுவின் மூலம் பண மோசடி செய்த 2 பெண்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்ன ஆலம்பட்டி கிராமத்தில் வசிக்கும் சில பெண்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் நாங்கள் எங்கள் ஊருக்கே அருகே அமைந்துள்ள வங்கியில் இருந்து மகளிர் சுய உதவிக் குழுவின் மூலம் கடன் வாங்கினோம். ஆனால் நாங்கள் வாங்கிய கடனை உறுப்பினர்கள் மூலம் முறையாக திரும்பி செலுத்தி விட்டோம். இந்நிலையில் வங்கியில் இருந்து நாங்கள் கடனை திரும்ப செலுத்தவில்லை என நோட்டீஸ் வந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நாங்கள் வங்கி அதிகாரிகளிடம் விசாரித்தோம். அதில் எங்கள் குழுவின் பெயரில் வங்கியில் இருந்து 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கிட்டு குழு உறுப்பினர்களிடம் 3 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக ஏமாற்றி இருக்கின்றனர். எனவே எங்களிடம் இருந்து பணத்தை பெற்று மோசடி செய்த 2 பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்