Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இவர்களை சும்மா விடக்கூடாது” பெண்ணுக்கு நடந்த உச்சகட்ட கொடுமை…. மாவட்ட ஆட்சியருக்கு வந்த மனு….!!!!

மாவட்ட ஆட்சியரிடம் பெண் ஒருவர்  மனு  அளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரிடம் நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்  மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஒரு நூல் பட்டறையில் மாதம் 6 ஆயிரம்  ரூபாய் சம்பளம் தருவதாக கூறி என்னுடன் சேர்ந்து 5 பெண்களை தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் சேர்த்துவிட்டார். ஆனால இதுவரை எங்களுக்கு ஒரு ரூபாய் கூட சம்பளமாக தரவில்லை. மேலும் சரியாக உணவு கொடுக்காமல் , ஓய்வின்றி தொடர்ந்து எங்களை வேலை வாங்கினார்கள். இந்நிலையில் கடந்த 2021 -ஆம் ஆண்டு நான் வேலை பார்த்து கொண்டிருந்தபோது திடீரென இயந்திரத்தில் எனது வலது கை சிக்கி முழுவதுமாக சிதைந்து விட்டது.

இதையடுத்து என்னை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு எனக்கு கை முழுவதும் பிளேடுகள் வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் நான் என் பெற்றோரை பார்க்க வேண்டும் என பட்டறை உரிமையாளரிடம் கூறினேன். ஆனால் அவர் என்னை வீட்டுக்கு விடவில்லை. மேலும் பட்டறை உரிமையாளரின் தந்தை என்னை  பலாத்காரம் செய்து தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்தார். இது குறித்து வேறயார் கிட்டயாவது சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார்கள்.

மேலும் அவர்கள் கடந்த 24-ஆம் தேதி என்னை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்வதாக திட்டமிட்டனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நான் அங்கிருந்து தப்பித்து ஓடி வந்துவிட்டேன். இந்நிலையில்  சிவகிரி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் நான் உதவி கேட்டேன். அவர் என்னை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். மேலும் ஆட்சியரிடம் சென்று மனு கொடுக்குமாறு கூறினார். எனவே என்னை மூன்று ஆண்டுகளாக கொத்தடிமையாக நடத்தி வேலை வாங்கிய பட்டறை உரிமையாளர் மற்றும் எனக்கு பாலியல் தொல்லை அளித்த அவரது தந்தை உள்ளிட்ட 2 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளார்.

Categories

Tech |