இலங்கையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களின் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை நாட்டில் முல்லை தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் சிலர் சட்டவிரோதமாக மீன் பிடித்து வந்துள்ளனர். இவர்களுக்கு அதிகாரிகளும் அனுமதி அளித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் நேற்று மீன் பிடிப்பவர்களுக்கு துணைபோகும் அதிகாரிகளை உடனடியாக மாற்ற வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போலீசார் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.