Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கெல்லாம் பென்ஷன் தொகை உயர்வு…. வெளியான 3 சூப்பர் நியூஸ்….!!!!

75 ஆவது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பாக நடத்தப்பட்ட சுதந்திர தின விழாவில் மு க ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பென்ஷன் உயர்வு உயர்வு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி விடுதலை போராட்ட தியாகிகளுக்காண பென்ஷன் தொகையை 18,000 ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளார். மேலும் விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கான குடும்ப பென்ஷன் தொகை 9000 இலிருந்து 10009 ரூபாயாக உயர்த்தப்பட்டதாக அறிவித்துள்ளார்.

இதுபோக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியானது 31 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு ஓய்வூதியதாரர்களுக்கான பென்ஷன் தொகை உயரும். இதனால் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களும், குடும்ப பென்ஷன்தாரர்களும் பயன்பெறுவார்கள்.

Categories

Tech |