Categories
கோவில்கள் மாநில செய்திகள்

இவர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க முடியாது… உச்சநீதிமன்றத்திற்கு பதிலளித்த தமிழக அரசு..!!

இசைக் கலைஞர்களுக்கான தனிநல வாரியத்தை அமைக்க இயலாது என சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

திருமணம், திருக்கோவில்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் மங்கள கருவிகளை வாசிக்கும் தவில், நாதஸ்வரம் உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாத நிலையில் உள்ளனர்.
அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் போன்று, வாத்தியக் கலைஞர்களும், பரதநாட்டிய கலைஞர்களுக்கும், தனி நல வாரியம் ஒன்றை அமைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்காக தமிழக சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் “இசைக்கருவிகளை வாசிக்கும் கலைஞர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் கலைஞர்களுக்கு நிரந்தர சம்பளமும் தரப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாட்டுப்புற கலைஞர் வாரியத்தில் 35 ஆயிரத்து  385 கலைஞர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கும் பல்வேறு நிதி உதவிகள் செய்துள்ளனர். 58 வயதை கடந்த உறுப்பினர்களுக்கு மாத ஊதியம் 2 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் நாட்டுப்புற கலைஞர்களுக்கும் , நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கலைஞர்களுக்கும் ரூ,1000 நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதில் மற்ற இசை வாத்தியங்கள் ஆன சாக்ஸபோன், மாண்டலின், வீணை, புல்லாங்குழல் போன்ற கருவிகளை இசைப்பவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது. இதற்காக தனி நலவாரியம் அமைக்க இயலாது,அவர்கள் தெருக்கூத்து கலைஞர்களின் உறுப்பினர்களாக சேர எந்த தடையும் இல்லை . எனவே,தனி நல வாரியம் அமைக்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” .இந்த வழக்கை எம்.எம்.சுந்தரேசர், ஹேமலதா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வர உள்ளது.

Categories

Tech |