Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு கல்லூரி கட்டணம் இல்லை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் 3ஆம் பாலினத்தவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச கல்வித் திட்டத்தின் கீழ் 340 ஏழை மாணவர்கள் இலவசமாக பயின்று வரும் நிலையில், சென்னை பல்கலை., மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் இலவச கல்வி வழங்கப்படும். சிண்டிகேட் குழு ஒப்புதல் தந்தவுடன் இந்த நடைமுறை வரும் கல்வியாண்டில் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் ஒருசில 3ஆம் பாலினத்தவர்கள் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பொது இடங்களில் பொதுமக்களிடம் பணம் கேட்பது மற்றும் பாலியல் தொழிலில் ஈடுபடுவது ஆகியவற்றில் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து அவர்களை மாற்றி வாழ்வில் நல்லதொரு பாதையில் பயணிக்க செய்யும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |