இந்தியா முழுவதும் மக்கள் கொரோனாவினால் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் பீதி அடைந்த மக்கள் தங்களுடைய உயிருக்கு காப்பீடு செய்ய சிறந்த பாலிசி ஏதேனும் கிடைக்குமா என்று தேடி அலைகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் சில வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு வசதியை வழங்குகின்றன. அதுமட்டுமின்றி பிக்சட் டெபாசிட் திட்டத்தில் சேமித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி டிசிபி, ஐசிஐசிஐ வங்கிகள் இந்த காப்பீட்டு சலுகையை வழங்குகின்றன.
டிசிபி பொருத்தவரை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு இலவச காப்பீடு வழங்குவதற்காக ஆதித்ய பிர்லா சன் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. டிசிபி வங்கியின் சுரக்ஷா எஃப்டி திட்டத்தின் கீழ் 18 முதல் 55 வயது வரை பெறலாம். இந்த வங்கியில் நீங்கள் ஐந்து லட்சம் டெபாசிட் செய்திருந்தால் 5 லட்சம் காப்பீட்டுத் தொகை கிடைக்கும் டெபாசிட் செய்த தொகைகு சமமாக காப்பீடு வழங்கப்படுகிறது.
இருப்பினும் அதிகபட்சம் 50 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐசிஐசிஐ வங்கி ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப் இன்சுரன்சுடன் இணைந்து இந்த காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 3 லட்சம் வரையில் காப்பீடு வழங்கப்படுகிறது. இதற்கான வயதுவரம்பு 18 முதல் 50 ஆண்டுகள் ஆகும்.