விஷால் நடித்த வீரமே வாகைசூடும் படம் சென்ற பிப்ரவரி மாதம் வெளியாகியது. இப்போது லத்தி, துப்பறிவாளன்-2, மார்க் ஆண்டனி போன்ற படங்கள் கைவசம் இருக்கின்றன. இதில் லத்தி படப்பிடிப்பு ஐதராபாத்தில் மும்முரமாக நடைபெறுகிறது. இது போலீஸ் கதை, துப்பறிவாளன் படத்தை இயக்கிய மிஷ்கின் விலகியதால் விஷாலே அப்படத்தை டைரக்டு செய்ய இருக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதையடுத்து நடிக்கவுள்ள “மார்க் ஆண்டனி” விஷாலுக்கு 33-வது படம் ஆகும்.
இந்த நிலையில் விஷால் நடிக்கவுள்ள 34வது படம் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தினை முத்தையா டைரக்டுசெய்து, கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்பே விஷால் நடித்து 2016ஆம் ஆண்டு வெளியான மருது படத்தை முத்தையா இயக்கியிருந்தார். 6 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் புதிய படத்தில் இணைகிறார்கள். இது அதிரடி தகராறு படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.