Categories
உலக செய்திகள்

“இவரை குறைத்து மதிப்பிட கூடாது”…. எலான் மஸ்க் குறித்து கருத்து தெரிவித்த பில்கேட்ஸ்….!!

ட்விட்டர் நிறுவனத்தை வைத்து எலான் மஸ்க் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை என பில்கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

உலகில் மிக பெரிய பணக்காரர்களில் ஒருவர் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க். இவர் டுவிட்டர் என்ற சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.3.30 லட்சம் கோடி) வாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் தனது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளை விற்பனை செய்துள்ளார். இந்த டுவிட்டர் ஊடக நிறுவனத்தை வாங்கும் பேரத்தை முடிப்பதற்காக இவர் தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து தற்போது டுவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க்-யிடம் சென்று இருப்பது குறித்தும் நிறுவனத்தின் எதிர்காலம் குறித்தும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும் உலக கோடீஸ்வரர்களின் ஒருவருமான பில் கேட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து பில் கேட்ஸ் கூறியதாவது “எலான் மஸ்க் உண்மையில் டுவிட்டரை இன்னும் மோசமாக்க முடியும். ஆனால் அவர் என்ன செய்யப் போகிறார் என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை. அதே சமயத்தில் அவரது மற்ற நிறுவனங்களில் (டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ) சாதனை அற்புதமாக உள்ளது. மேலும் அந்த நிறுவனங்களில் சிறந்த பொறியாளர்கள் குழுவை ஒன்றிணைத்துள்ளத்தில் மஸ்க் சிறப்பாக செயல்படுத்துகிறார் என்று நான் நம்புகிறேன்.  இந்த டுவிட்டர் நிறுவனத்திலும் அவரால் அதை செய்ய முடியுமா என்று எனக்கு சந்தேகம் உள்ளது. ஆனால் அவரை ஒருபோதும் குறைத்து மதிப்பிடக்கூடாது” என்று பில் கேட்ஸ் கூறினார்.

Categories

Tech |