நடிகை குஷ்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். சினிமா, சீரியல், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பல முகங்களை கொண்டவர் நடிகை குஷ்பு. இந்நிலையில் நடிகை குஷ்பு தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், “கடைசி 2 அலைகளில் இருந்து தப்பித்த பிறகு கோவிட் இறுதியாக என்னைப் பிடித்துவிட்டது. நான் இப்போது கொரோனா பாஸிட்டிவ் ஆகியுள்ளேன். நேற்று மாலை வரை நெகட்டிவாகதான் இருந்தது.
சளிதொல்லை ஏற்பட்டதால் பரிசோதனை செய்ததில் உறுதியாகியுள்ளது.என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். தனியாக இருப்பதை வெறுக்கிறேன். எனவே அடுத்த 5 நாட்களுக்கு என்னை எண்டெர்டெய்ன் செய்யுங்கள். மேலும் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்’ இவ்வாறு நடிகை குஷ்பு பதிவிட்டுள்ளார். அவரது பதிவை பார்த்த ரசிகர்கள் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.