Categories
தேசிய செய்திகள்

இவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூபாய் 25 லட்சம் பரிசு வெளியான முக்கிய அறிவிப்பு

மும்பையில் கடந்த 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டி வெடிப்பில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி ஆனால் தாவூத் இப்ராகிமை தேடப்படும் பயங்கரவாதியாக இந்தியா அறிவித்துள்ளது. அவர் பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் காராச்சி நகரில் தலைமறைவாக வசித்து வருகிறார். பாகிஸ்தான் அரசு அவருக்கு தேவையான வசதிகளை செய்து வருகிறது. இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கூறியது, இந்தியாவில் ஒரு பயங்கரவாத குழுவை அமைத்து நாட்டுககுள் வெடிபொருள்கள், பயங்கர ஆயுதங்கள், கள்ள நோட்டுகள் மற்றும் போதைப்பொருளை கடத்தல் போன்றவற்றில் சாவுத் இப்ராஹிம் ஈடுபட்டு வருகிறார்.

பாகிஸ்தானில் இருந்து கொண்டு அந்நாட்டின் ஐஎஸ்ஐ புலனாய்வு அமைப்பின் உதவியோடு இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை நடத்தவும் திட்டமிட்டு வருகிறார்கள். இதனால் நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே தாவுத் குறித்த தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று என்ஐஎ தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து தாவுத் மட்டுமுல்லாமல் அவரது கூட்டாளிகள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கும் சன்மானம் வழங்கப்படும் என்றும் என்ஐஏ தெரிவித்துள்ளது. ஒவ்வொரு கூட்டாளிக்கும் வெவ்வேறு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டைகர் மேமன், அனீஸ் இப்ராஹிம், ஜாவேத் சிக்னா ஆகியோர் குறித்த துப்பு கொடுத்தால் ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |