Categories
விளையாட்டு கிரிக்கெட்

“இவரு 10 கோடிக்கு ஒர்த்தானவர்தா”….. நல்லா பயம் காட்டுறதுதான் அவரோட வேலையே…. புகழ்ந்து பேசிய கவாஸ்கர்….!!!!

முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், ஹர்ஷல் படேல்  குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இந்தியாவிற்கு வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கு பெற்று விளையாடியது. இதில் இந்திய அணி, முழு ஆதிக்கம் செலுத்தி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து கொல்கத்தாவில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமாகி உள்ளது. இந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 157/ 7 ரன்கள் சேர்த்த நிலையில், அதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 162/4 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை தட்டிச்சென்றது.

இந்த போட்டியில் ஹர்ஷல் படேல், சூர்யகுமார் யாதவ், ரவி பிஸ்னோய் ஆகியோர்தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள். ஹர்ஷல் படேலை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 10.75 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. இந்த நிலையில் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர்,  ஹர்ஷல் படேலை குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் ஹர்ஷத் படேல் ஐபிஎல் ஏலத்தில் சம்பாதித்த ஒவ்வொரு ரூபாய்க்கும் அவர் தகுதியானவர்தான் என்றும் கடந்த சீசனில் சிறப்பாக விளையாடி உள்ளார்.

அவர் தொடர்ந்து தன்னை மேம்படுத்திக் கொண்டு வருகிறார். மேலும் பேசிய அவர்,  முன்பெல்லாம் வேகத்தை மாற்றி மாற்றி பந்துவீச மாட்டார் என்றும் அதனால் பேட்ஸ்மேன்கள் அவரை எதிர்கொள்ள மிகவும் விரும்பினார்கள். மேலும் அவரும் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து வந்துள்ளார். இதனையடுத்து அந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டுதான் அசல் வலிமையான பௌலராக  இன்று உருவெடுத்துள்ளார். இதனால் அவரை எதிர்கொள்ள இன்று பேட்ஸ்மேன்கள் பயப்படுகிறார்கள். இவரது ஓவரில் விக்கெட்டை விட்டு விடக்கூடாது என்று எண்ணி தான் விளையாடி வருகிறார்கள் என தெரிவித்தார்.

Categories

Tech |