மின்துறையில் முறைகேடுகள் நடந்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகக் கூறும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எங்கு வேண்டுமானாலும் வரத் தயாராக இருக்கின்றேன். கூடுதலாக 24 மணி நேரத்திற்குள் அண்ணாமலைக்கு ஆதாரங்களை வெளியிட நேரம் கொடுக்கப்பட்டுள்ளது, தவறினால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் தனது இருப்பைக் காட்ட இதுபோன்ற செய்திகளை வெளியிடுகிறார். மேலும் ஏதேனும் ஆதாரம் இருந்தால், அவர் தொடரும் வழக்கை எதிர்கொள்ளத் தயாராக உள்ளேன் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழ்நாட்டில் செயற்கையாக மின் பற்றாக்குறையை ஏற்படுத்தி, அதிக விலைக்கு வாங்குகின்றனர். லஞ்ச ஒழிப்புத் துறையினர் செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை நடத்தினால் ஆவணங்கள் கிடைக்கும். மின் தட்டுப்பாடு இல்லை எனக் கூறிய அமைச்சர் செந்தில்பாலாஜி ஏன் ரூ.20க்கு வெளியிலிருந்து மின்சாரத்தை வாங்க வேண்டும். செந்தில்பாலாஜி என் மீது வழக்கு தொடரட்டும், நீதிமன்றத்தில் பதில் சொல்கிறேன்” என்று பேசியுள்ளார்.