பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அப்போதிலிருந்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கமர்சியல் படங்கள் மற்றும் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவரும் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் ரன்பீர் கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தற்போது ஆலியா பட், கல் இதயம் என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுன் உடன் குத்தாட்டம் போட வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் ஆலியா பட். மேலும், எனக்கு புஷ்பா படத்தில் வரும் ஊ சொல்றியா மாமாஎன்ற பாடலுக்கு நடிகை சமந்தா மற்றும் அல்லு அர்ஜுன் உடன் சேர்ந்து ஆட வேண்டும் என்ற ஆசை உள்ளது. அந்தப் பாடல் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். புஷ்பா 2 படம் தற்போது எடுக்கப்பட உள்ளதால் ஆலியா பட் ஆசை விரைவில் நிறைவேற வாய்ப்புள்ளது.