டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு இசை நாடகத்தை முதல் முறையாக இந்தியாவில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளார்.
இந்தியாவில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை முதன் முறையாக அனைத்து குழந்தைகளின் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதமாக டெல்லி அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர் ,டாக்டர் பி. அம்பேத்கர் ஆவார் .
இவரின் இந்த இசை நாடகத்தை மொத்தம் 50 முறை ஒளிபரப்பப்படுவதாகவும் மற்றும் இலவசமாக மக்கள் அனைவரும் காணலாம் என்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். அதன்படி அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு நாடகம் கடந்த ஜனவரி 4 முதல் நேரு மைதானத்தில் ஒளிபரப்பப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் அவரது வாழ்க்கை வரலாற்று நாடகத்தை ஒளிபரப்ப டெல்லி முதல்வர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார். இதுகுறித்து டுவிட்டரில் கெஜ்ரிவால் கூறியதாவது, வருகின்ற பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் மார்ச் 12ஆம் தேதி வரை சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை குறித்த இசை நாடகம் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ஒளிபரப்பப்படுகிறது. இந்த காட்சிகள் ஒரு நாளுக்கு மாலை 4 மணி மற்றும் 7 மணி என இரு வேளையில் ஒளிபரப்பப்படும் என்றும் நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் இலவசம் எனவும் கூறியுள்ளார்.