திமுக எம்பி ஆ.ராசா சமீபத்தில் இந்துக்கள் குறித்த சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இந்துக்கள் குறித்தும் இந்து மதம் குறித்து தவறாக பேசியதாக ஆ.ராசாவுக்கு எதிராக தமிழகம் முழுதும் பல காவல் நிலையங்களில் பாஜக சார்பாக புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் திமுக எம்பி ஆ.ராசாவுக்கு மிரட்டல் விடுத்து பேசிய பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமியை போலீசார் கைது செய்ய உள்ளனர். இதற்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று மதுரை மாவட்டத்தில் தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை செய்தியாளர்களிடம் சந்தித்து பேசியபோது, ஆ.ராசாவின் பேச்சு தமிழகத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சர்ச்சை பேச்சுகளால் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, மீண்டும் அதே போன்ற கருத்துக்களை ஆ.ராசா பேசி வருகிறார். இதனால் தமிழக சகோதரிகளின் மனதை புண்படுத்தும் வகையில் ஆ.ராசா பேசி வருகிறார். காலங்களை கடந்து அழிவை சந்திக்காத தர்மம். அனைவருக்கும் மோட்சம் கிடைக்கட்டும் என்பது இதன் குறிக்கோள். அதனால் தான் கடைசி காலத்தில் கருணாநிதி ராமராஜனின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். சாதி என்பதை அடிப்படையாக வைத்து இந்து மதத்தில் எந்த கொள்கையும் கிடையாது. எங்கே இருந்து புதுப்புது கருத்துக்களை கொண்டு வந்து, தமிழகம் என்ற எல்லை நோக்கி செல்கிறார். ஆ.ராசாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வழக்கு புனைந்து கைது செய்யப்படுகிறார்கள். அதை கண்டித்து பேசினால் பிளவு ஏற்படுமாம், வேடிக்கையாக இருக்கிறது. இதனை எடுத்து ஆ.ராசாவின் பேச்சை கண்டித்து பாஜக சார்பில் மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. குறிப்பாக அனைவரின் நாடாளுமன்ற தொகுதியில் 20 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளது. இதனை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். ஆராசாவுக்கு ஆதரவு தெரிவித்து திமுக அமைச்சர்கள் யாரும் பேசவில்லை. குழப்பமான சித்தாந்தத்திற்குள் திமுக கூடு கட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.