Categories
சினிமா தமிழ் சினிமா

“இவனுக்கு முடிவே இல்ல” சிம்பு படத்தின் மாஸ் டிரெய்லர் வெளியீடு….. இணையத்தில் கொண்டாடும் ரசிகர்கள்…..!!!!

பிரபல நடிகர் சிம்பு படத்தின் டிரைலர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சிம்பு விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து இயக்குனர் கௌதமேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் தற்போது நடித்துள்ளார். ஏற்கனவே சிம்பு-கௌதம் மேனன் கூட்டணியில் உருவான 2 திரைப்படங்களும் சூப்பர் ஹிட் ஆனதால் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்த படத்தின் 2 பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக இருக்கும் நிலையில் படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

Categories

Tech |