திருப்பரங்குன்றத்தில் 458 வாக்குச் சாவடிகளுக்கு 916 மின்னணு இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பொதுமக்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்னணு இயந்திரங்களை பொருத்தி வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் இருக்கும் 458 வாக்குச்சாவடிகளில் சுமார் 916 மின்னணு இயந்திரங்கள் பொருத்தப்படவுள்ளது.
மேலும் அவசரநிலை தேவைப்பாட்டிற்காக 184 மின்னணு இயந்திரங்கள் கையிருப்பில் வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையே தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளில் பணியாற்ற ஒரு வாக்குச்சாவடியில் 5 பேர் வீதம் 458 வாக்குச் சாவடிகளுக்கு 2,290 ஊழியர்கள் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து வருகின்ற 31 ஆம் தேதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சார்பாக வேட்பாளர்களின் முன்னிலையில் மின்னணு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தப்படவுள்ளது.