காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை முன்னிட்டு முதியோர்களுக்கு வழங்கப்பட்ட தபால் ஓட்டில் 1593 வாக்குகள் பெறப்பட்டது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, அனைத்து மாவட்டங்களிலிருக்கும் மூத்த குடிமக்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் அத்தியாவசியமான பணிகளில் ஈடுபடுவோருக்கும் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்கும் விதமா தபால் ஓட்டினை தேர்தல் குழு வழங்கியது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூத்த குடிமக்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் தபால் ஓட்டு வழங்கப்பட்டது. அதில் மூத்த குடிமக்களிடமிருந்து 1593 தபால் ஓட்டுகளும், ஊனமுற்றோர்களிடமிருந்து 363 தபால் வாக்குகளும் பெறப்பட்டதாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் அறிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர்கள் அளித்த வாக்கினை பாதுகாப்பு அறையில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறியுள்ளார்.