பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையுடன் 19 வயது இளம் பெண் லண்டனில் மாயமாகியுள்ளார்.
கிழக்கு லண்டனில் உள்ள ஹோட்டலுக்கு கடந்த 29-ஆம் தேதி மாலை 8 மணிக்கு ரோக்சானா என்ற 19 வயது இளம் பெண் வந்துள்ளார். இவர் பிறந்து 5 நாட்களே ஆன குழந்தையுடன் ஹோட்டலில் இருந்து வெளியே வந்த பின்னர் மாயமாகியுள்ளார். மேலும் ரோக்சானா அங்கிருந்து செல்லும்போது வெள்ளை நிற டீ-சர்ட் உடுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் போலீசாருக்கு தாய் மற்றும் குழந்தையின் பாதுகாப்பு பற்றி கவலை எழுந்துள்ளது. இந்நிலையில் அவர்களின் பாதுகாப்பு கருதி அவர்களைத் தேடி வருவதாகவும் மற்றும் ரோக்சானாவின் புகைப்படத்தை வெளியிட்டு அவர்களை குறித்த தகவல் தெரிந்தால் எங்களிடம் தெரிவிக்குமாறு போலீசார் கூறியுள்ளனர். மேலும் இந்த செய்தி ரோக்சானாவிற்கு தெரிந்தால் தங்களை தொடர்பு கொள்ளுமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.