மதுரையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் சேடப்பட்டியிலிருக்கும் பேருந்து நிறுத்தத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் முத்துப்பாண்டிபட்டியில் வசித்துவரும் சதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர் கணேசன் ஆகியோர் வந்தனர்.
இந்நிலையில் காவல்துறையினரை கண்டதும் அவரது நண்பரான கணேஷ் மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்கி தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் சதீஷ்குமாரை சோதனை செய்ததில் அவர் 2 கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.