செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தமிழக அரசு “கோவிலில் அறங்காவலர் இல்லாமல் எந்த ஒரு செயலும் தன்னிச்சையாக செயல்படுத்த முடியாது. அதேபோல் எந்த கோவிலும் பணத்துடன் இருந்து விடக்கூடாது” என்பதில் தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறது என்று கூறியுள்ளார். அதேபோல் தமிழக அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் 6,414 கோவில்களில் இந்து சமய அறநிலையத் துறையினரால் 1,415 கோவில்கள் அழிக்கப்பட்டுள்ளன. அதேபோல் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கோவில்களில் நிதியை சூறையாடும் நோக்கத்துடன் தான் செயல்பட்டு வருகின்றனர் என்றும் சாடியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் தமிழக அரசு கிறிஸ்துவ மிஷினரிகளின் கைக்கூலியாக இருந்து வருவதாகவும் எச்.ராஜா பரபரப்பாக பேசியுள்ளார்.