மகாராஷ்டிராவில் பருவ மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அம்மாநில அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்தவரை கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பல லட்சக் கணக்கான ஏக்கரில் விளைந்திருந்த பயிர்களை நாசம் அடையச் செய்தது. இதனால் விவசாயிகள் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மகாராஷ்டிர அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து மும்பை முதல்வர் உத்தவ் தாக்கரே, துணை முதல்வரும் நிதித்துறை அமைச்சருமான அஜித் பவார் பொதுப்பணித் துறை அமைச்சர் அசோக் சவான் ஆகியோர் சேர்ந்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில் கடந்த ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 55 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் விளைவிக்கப்பட்டு இருந்த பயிர்கள் முழுவதும் தென்மேற்கு பருவமழையால் நாசமாயின. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 10,000 கோடி வரை நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி 2 ஹெக்டேருக்கு மேல் விவசாய நிலம் கொண்டவர்களுக்கு நிவாரண துறையின் நிவாரணத் தொகை வழங்கப்படும என அரசு அறிவித்தது. அதன்படி பாசன வசதி இல்லாத நிலங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும், பாசன வசதி கொண்ட நிலங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும், தோட்டக்கலை உள்ளிட்ட பல ஆண்டுகள் விளையும் பயிர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.