Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இளைஞர் கொலை வழக்கு – குண்டர் சட்டத்தில் இருவர் கைது!

இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகளை காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அம்பேத்கர் நகர் நன்னுமியான் சாயுபு தெருவைச் சேர்ந்த குமார்(25). இவரை கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் தேதியன்று அரக்கோணம் மசூதி தெருவில் வைத்து மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர்.

இது குறித்து குமாரின் தந்தை ஜெயசங்கர் அளித்த புகாரின் பேரில் அரக்கோணம் காவல் நிலைய ஆய்வாளர் முத்துராமலிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அரக்கோணம் சோளிங்கர் ரோடு பகுதியைச் சேர்ந்த கௌதம் (எ) சசிக்குமார்(24), அரக்கோணம் ரயில்வே குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அபி (எ) அபிஷேக்(24) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் குற்றவாளிகள் சசிகுமார், அபிஷேக் மீது ஏற்கனவே அரக்கோணம் காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததால், அவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |