Categories
அரசியல் மாநில செய்திகள்

இளைஞர்கள் சிப்பாய்களே…! எதிரிகளை ஓட ஓட விரட்டுங்கள்… தமிழக முதல்வர் அழைப்பு …!!

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கறில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது பேசிய அவர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் கலந்து கொண்டு இருக்கின்ற இளைஞர் பட்டங்களை பார்க்கின்ற பொழுது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மீண்டும் ஆட்சியில் அமைவது உறுதி. இங்கே காண்கின்ற காட்சி அதையே பிரதிபலிக்கிறது. இன்றைக்கு இளைஞர் பட்டாளங்கள் நிறைந்த கட்சி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.

தேர்தல் என்ற போர் நெருங்கி வருகின்றது. அந்த தேர்தல் என்ற போரிலே . இளைஞர்கள் சிப்பாய்கள் எதிரிகளை ஓட ஓட விரட்டி வெற்றிக்கொடி நாட்ட வேண்டும். இந்த இயக்கத்தை உருவாக்கிய பொன்மண செம்மல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா இருபெரும் தெய்வங்களாக இருந்து நமக்கு ஆசி வழங்கிய கொடுக்கின்றார்கள்.

தீய சக்தி திராவிட முன்னேற்ற கழகத்தில் இருந்து மக்களை காப்பதற்கு அன்றைக்கே பொன்மண செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கிய இயக்கம், தோற்றுவித்த இயக்கம் அதிமுக. ஸ்டாலின் போற பக்கம் எல்லாம் அவதூறான பிரச்சாரம் செய்கின்றார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை பற்றி அவதூறு செய்தியை பரப்புகிறார். அரசை பத்தி அவதூறு செய்தியை  வெளியிடுவது, முதலமைச்சரை பற்றியும், அமைச்சர்களை பற்றியும் தவறான செய்திகள் சொல்கிறார். கட்சி நிர்வாகிகளை தவறாக விமர்சிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஏழை எளிய மக்களுடைய தொண்டர் படை இயக்கம். ஏழைகள் நிறைந்த இயக்கம்  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், இது உழைப்பால் உயர்ந்த இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக இயக்கம், சொந்த காலையிலே இன்றைக்கு நாம் நின்று கொண்டிருக்கிறோம். புரட்சி தலைவி அம்மா அவர்கள் மறைவுக்கு பிறகு எவ்வளவு சோதனையெல்லாம் சந்தித்தோம். அத்தனை சோதனைகளையும் உங்களுடைய ஆதரவோடு, இளைஞர் பட்டாளம் ஆதரவோடு வென்று நிலைநிறுத்தியது அம்மாவுடைய அரசு என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Categories

Tech |