தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் இளைஞர்கள் பலரும் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த நிலையில் மாநிலம் முழுவதும் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தில் அரசு பல வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதத்தில் இரண்டு முறை தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இது குறித்து அறிவிப்பு அவ்வபோது வெளியிடப்பட்டு வருகிறது.
அவ்வகையில் சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற நவம்பர் 26ம் தேதி ஓமலூர் பத்மவாணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் 300-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே வேலைவாய்ப்பில்லா இளைஞர்கள் இதில் கலந்துகொண்டு பயன் பெறுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.