Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே ரெடியா?…. அக்டோபர் 28 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக வேலைவாய்ப்பு முகாம்கள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இளைஞர்கள் பலரும் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தனர். இதனிடையே நடப்பு ஆண்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் அவ்வபோது அதற்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது.

அவ்வகையில் தற்போது சேலம் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அக்டோபர் 28ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெறும். சேலம் மாவட்டத்தை சுற்றியுள்ள வேலை வாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் இதில் பங்கேற்க உள்ளன. வேலைவாய்ப்பற்றவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |