திருச்சிராப்பள்ளியில் நாளை (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒன்று நடைபெறவுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த முகாம் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வழங்கும் நோக்கத்தில் நடத்தபடுகிறது. இதில் 10,12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கும், டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்த பட்டதாரிகளும் கலந்து கொள்ளலாம். முகாமில் நேர்காணல் நாளை காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
இந்த நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல், சுயவிபரக்குறிப்பு மற்றும் ஆதார் அட்டை நகலுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைவரும் நேரில் வருகைதந்து பயன்பெற்று கொள்ளுமாறு, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.