Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே! மிஸ் பண்ணிடாதீங்க…. மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. வெளியான சூப்பர் நியூஸ்…!!!!

மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் அகம் பவுண்டேஷன் சார்பில் இளைஞர்களுக்கான மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 40 தொழில் நிறுவனங்கள் கலந்துகொள்ள இருக்கிறது. இதன் மூலமாக 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8 முதல் 12-ம் வகுப்புவரை படித்தவர்கள், ஐடிஐ, டிப்ளமோ, நர்சிங், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் இளைஞர்களை தேர்வு செய்யும் நிறுவனங்கள் வேலைக்கேற்ற ஊதியம் வழங்கும். இதில் கலந்து கொள்பவர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த முகாமில் கலந்து கொள்வதற்கு எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. இந்த வேலை வாய்ப்பு முகாம் மதுரை சந்திப்பு ரயில் நிலையம் அருகே உள்ள சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. இந்த முகாம் வருகிற ஏப்ரல் 24-ம் தேதி நடைபெறும். எனவே இந்த வாய்ப்பினை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Categories

Tech |